அரசு மேல்நிலைப்பள்ளி வாலிகண்டபுரம் மணிவிழா நினைவு கலையரங்க மேடை அடிக்கல் நாட்டு விழா.
10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவர்களுக்கும் அறிவியல் மற்றும் கணித அறிவியல் பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற மாணவச் செல்வங்களுக்குரொக்கப் பரிசு வழங்கி பொன்னாடை அணிவித்து கௌரவம் செய்யப்பட்டது.;
அரசு மேல்நிலைப்பள்ளி வாலிகண்டபுரம் மணிவிழா நினைவு கலையரங்க மேடை அடிக்கல் நாட்டு விழா. பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வலிகண்டபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் பள்ளியின் அறுபதாவது ஆண்டினை முன்னிட்டு மணிவிழா நினைவு கலையரங்க மேடை அமைத்திட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் முன்னாள் ஆசிரியரும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருமான சி.ரங்கசாமி அவர்கள் தலைமை ஏற்றார். பள்ளியின் முன்னாள் ஆசிரியையும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருமான A. சரோஜாமுன்னிலை வகித்தார்.முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் திரு ஐ. ஷாஜகான், செயலாளர் வீ. செல்லமுத்து, இணைப் பொருளாளர் பெத்துசாமி , முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பசுருதீன், முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவி கலியம்மாள் அய்யா கண்ணு ,பள்ளி மேலாண்மை குழு தலைவி அமராவதி, துணைத்தலைவர் பிச்சை பிள்ளை,பள்ளியின் முன்னாள் மாணவரும் கனிம வளத்துறை கோட்ட மேலாளருமான மருத. மனோகரன், வேப்பந்தட்டை அரசு கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் ராமர், வேப்பந்தட்டை துணை தாசில்தார் சீனிவாசன்,முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் அமீர் ,சையது உசேன்,பள்ளி மேலாண்மை குழு உறுப்பினரும் கல்வியாளருமான சையது உசேன்,முன்னாள் மாணவரும் பணி நிறைவு பெற்ற உதவி கருவூல அலுவலருமான அலமேலு,முன்னாள் மாணவரும் அரசு தொழில் நுட்ப கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் ஆன திரு. கடவுள்,முத்தவல்லி ஜாபர் சாதிக்,முன்னாள் மாணவர்கள் உஸ்மான் அலி,அய்யாக்கண்ணு, கண்ணு,திரு எஸ் கே பாஷா, சாந்தப் பன்,இளஞ்செழியன்,திருமதி மல்லிக் ஷாஜகான், கலை (எ) மோகன்ராம், எல்.ஐ.சி.கருப்பையா, ஆசிரியர் செல்வராஜ், கண்ணபிரான் இருவர் ஆர்ட்ஸ் அந்தோணி,தினேஷ் உள்ளிட்ட முன்னாள் மாணவர்கள் பலரும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களும், ஆசிரியர் ஆசிரியைகளும் மாணவ மாணவிகள் உள்ளிட்ட 75 பேர் கலந்து கொண்டனர்.நிகழ்வின் போது 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவர்களுக்கும் அறிவியல் மற்றும் கணித அறிவியல் பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற மாணவச் செல்வங்களுக்குரொக்கப் பரிசு வழங்கி பொன்னாடை அணிவித்து கௌரவம் செய்யப்பட்டது.முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் .க . செல்வராசு வரவேற்புரை ஆற்றினார்.நிறைவாக முன்னாள் மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் திரு.வீ. கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.1988 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட முன்னாள் மாணவர் சங்கம் 1988ல் பள்ளிக்கு ஆறு வகுப்பறை கட்டிடம்,2022-ல் பள்ளி நூலகம்,2024 ல் 13 கழிவறைகள் கொண்ட மாணவிகள் சுகாதார வளாகம்,வசதிகளை பள்ளிக்கு ஏற்படுத்தி தந்துள்ளது.தற்போது பள்ளியின் அறுபதாவது ஆண்டு மணி விழாவை ஒட்டி ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்க மேடை, ஐந்து லட்சம் மதிப்பில் பீடத்துடன் திருவள்ளுவர் சிலை, புதிய கொடிக்கம்பம் ஆகிய நற்பணிகளைச் செய்திட முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.