கெங்குவார்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் (63). இவர் அவரது உறவினரின் வீட்டு விசேஷத்திற்காக நேற்று முன் தினம் இருசக்கர வாகனத்தில் பொருட்கள் வாங்கிக் கொண்டு வீடு திரும்பி உள்ளார். கொடைக்கானல் சாலை அருகே வந்த பொழுது பைக்கின் செயின் அருந்துள்ளது. அதனால் ரோட்டின் ஓரமாக நின்றுள்ளார். அப்பொழுது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் பெருமாள் மீது மோதியதில் அவர் உயிரிழந்தார்.இதுகுறித்து நேற்று (ஜூன்01) போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.