கலைஞர் பிறந்த நாளில் தென்னங்கன்று வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
கலைஞர் பிறந்த நாளில் தென்னங்கன்று வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.;
கலைஞர் பிறந்த நாளில் தென்னங்கன்று வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் மு கலைஞர் கருணாநிதி அவர்களின் 102 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கரூர் தாந்தோணி மேற்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர் கோயம்பள்ளி பாஸ்கர் தலைமையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் ஆண்டான் கோவில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி கலந்து கொண்டார். தான்தோணி மேற்கு ஒன்றிய விவசாய அணி சார்பில் விவசாயிகளுக்கு சுமார் நூறு தென்னங்கன்று விவசாயிகளுக்கு வழங்கினர். மேலும், கோவிந்தம் பாளையம், ஆத்தூர் பிரிவு ,மருத்துவர் நகர் போன்ற இடங்களில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் தாந்தோணி மேற்கு ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் அம்பிகை செந்தில், கிளைக் கழகச் செயலாளர் , மாவட்ட நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.