கருர் -கலைஞர் பிறந்த நாள்- மாவட்ட மாணவர் அணி சார்பில் அன்னதானம்.

கரூர் -கலைஞர் பிறந்த நாள்- மாவட்ட மாணவர் அணி சார்பில் அன்னதானம்.;

Update: 2025-06-03 08:24 GMT
கரூர் -கலைஞர் பிறந்த நாள்- மாவட்ட மாணவர் அணி சார்பில் அன்னதானம். தமிழக முன்னாள் முதலமைச்சர், திமுக முன்னாள் தலைவருமான மு. கருணாநிதி அவர்களின் 102 வது பிறந்த நாளை இன்று தமிழக முழுவதும் உள்ள திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் 161 இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு இன்று கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை திமுக கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். இதில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் முன்பு திமுக மாவட்ட மாணவரணி சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த அன்னதானத்தில் தக்காளி சாதம் , தயிர் சாதம்,கேசரி , காய்கறி கூட்டு ,தண்ணீர் பாட்டில் உள்பட அனைத்தும் வழங்கினர். இந்த அன்னதான நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு வரிசையில் நின்று அன்னதானத்தை பெற்று சென்றனர். கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு இந்த அன்னதானத்தை துவக்கி வைத்தனர்.

Similar News