ஆண்டிபட்டி கோட்டை அருகே டூவீலர்மீது டாட்டா ஏஸ் வாகனம் மோதி விபத்து. இளைஞர் படுகாயம்.

ஆண்டிபட்டி கோட்டை அருகே டூவீலர்மீது டாட்டா ஏஸ் வாகனம் மோதி விபத்து. இளைஞர் படுகாயம்.;

Update: 2025-06-03 10:35 GMT
ஆண்டிபட்டி கோட்டை அருகே டூவீலர்மீது டாட்டா ஏஸ் வாகனம் மோதி விபத்து. இளைஞர் படுகாயம். திண்டுக்கல் மாவட்டம் , நத்தம், செந்துறை , நல்ல பிச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் ராஜேஷ் வயது 24 . இவர் மே 28ஆம் தேதி மாலை 5:30- மணி அளவில் , மதுரையில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்றார் . இவரது வாகனம் கரூர் மாவட்டம் , ஆண்டிப்பட்டி கோட்டை பகுதியில் செயல்படும் தனியார் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது , அதே சாலையில் கரூர், பள்ளப்பட்டி , மண்மாரி பகுதியைச் சேர்ந்த முகமது ஹனிபா வயது 50 என்பவர் வேகமாக ஓட்டி வந்த டாட்டா ஏஸ் வாகனம் , ராஜேஷ் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது . இதில் வாகனத்துடன் கீழே விழுந்ததில் ராஜேஷுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு திண்டுக்கல்லில் செயல்படும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் அறிந்த ராஜேஷ்-ன் சகோதரர் விக்னேஷ் வயது 22 என்பவர் அளித்த புகாரின் பேரில் ,சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் , டாட்டா ஏஸ் வாகனத்தை வேகமாகவும் , அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய முகமது ஹனிபா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.

Similar News