ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலில் உழவாரப்பணி
மன்னார்குடி அருகே மகாதேவப்பட்டினம் கிராமத்தில் உள்ள சம்போ மகாதேவ சிவன் கோவிலில் உழவாரப்பணி நடைபெற்றது.;
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மகாதேவி பட்டினத்தில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான சௌபாக்கியவதி சமேத சம்போ மகாதேவர் சிவன் கோவில் உள்ளது.இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த சிவன் கோவிலில் உழவாரப்பணி இன்று தொடங்கியது.இதனை மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் அறங்காவலர் குழு தலைவர் இளவரசன் தொடங்கி வைத்தார்.இதில் ஈரோடு விஜயமங்கலம் அப்பரடியார் சிவன் அடி திருக்கூட்டம் மற்றும் அவிநாசி சைவ திருமடம் சார்பில் ஏராளமான சிவனடியார்கள் பங்கேற்று உழவார பணி செய்தனர்.