தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்டமனுாரை சேர்ந்த முருகேசன், அவரது மனைவி சுந்தரவள்ளி மனு அளித்தனர். அதில் எங்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். 3-வது மகன் சி.ஆர்.பி.எப்., போலீஸ்காரராக பணிபுரிகிறார். அவருக்கு வீட்டை தானமாக எழுதி வழங்கினோ.ம் அதை பெற்றுக்கொண்டு எங்களை கவனிப்பதில்லை. எனவே அவருக்கு வழங்கிய சொத்துப் பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும் என கூறினர்.