கேரள மாநிலத்தில் வசித்து வரும் தேயிலை தோட்ட தொழிலாளி ஜோசப் (58). இவா், தனது சொந்த ஊரான நாகா்கோவிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் கேரளா செல்வதற்காக தேனி புதிய பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் காத்திருந்தாா். அப்போது, அங்கிருந்த மா்ம நபா்கள் அவர் வைத்திருந்த பையை திருடி சென்றனர். அதில், ரூ.18,000, செல்போன், ATM ஆகியவை இருந்தது. இதுகுறித்து தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.