நன்னிலம் பேருந்து நிலைய இலவச கழிப்பிடம் கட்டண கழிப்பிடமாக மாற்றியதால் பொதுமக்கள் அவதி
நன்னிலத்தில் இலவச கழிப்பிடத்தை கட்டண கழிப்பிடமாக மாற்றிய பேரூராட்சி நிர்வாகம்.;
நன்னிலத்தில் இலவச கழிப்பிடத்தை கட்டண கழிப்பிடமாக மாற்றிய பேரூராட்சி நிர்வாகம். நன்னிலத்தில் உள்ள அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இலவச கழிப்பிடங்கள் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது.நன்னிலம் பகுதியில் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள்,அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் விவசாய தொழிலாளர்கள் மற்றும் தினக்கூலி பணியாளர்கள் முதியோர்கள் உள்ளிட்ட 40- க்கும் மேற்பட்ட கிராம பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நன்னிலம் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் நன்னிலம் பேரூராட்சி நிர்வாகம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள இலவச கழிப்பிடத்தை கட்டணக் கழிப்பிடமாக மாற்றி ஒரு நபருக்கு 5 ரூபாய் என்று கட்டணம் வசூலித்து வருகிறது.இதற்காக பேரூராட்சி நிர்வாகம் டெண்டர் விட்டு தற்பொழுது 3 வருடத்திற்கு ஒரு லட்சம் என முன்பணம் பெறப்பட்டு தனியாருக்கு கொடுத்துள்ளது. ஏற்கனவே புதிய பேருந்து நிலையத்தில் பேரூராட்சி அலுவலகம் அருகில் கட்டண கழிப்பிடம் இயங்கி வரும் நிலையில் புதிய பேருந்து நிலையத்தில் இயங்கி வந்த இலவச கழிப்பிடத்தை கட்டண கழிப்பிடமாக மாற்றியதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் பேருந்து நிலையத்தில் இலவச கழிப்பிடம் இல்லாததால் பேருந்து நிலையத்தின் அருகிலேயே பொது இடங்களில் பொதுமக்கள் பலரும் சிறுநீர் கழித்து வருவதால் அப்பகுதி துர்நாற்றம் வீசுகிறது.. மேலும் தொற்று பரவும் அபாயம் உள்ளது. ஏழை எளிய மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வந்த நன்னிலம் பேருந்து நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பிடத்தை மீண்டும் ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் விதத்தில் இலவச கட்டண கழிப்பிடமாக மாற்ற நன்னிலம் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.