பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர்கள் பாண்டியன் - சீனியம்மாள் தம்பதினர். இவர்களது மகன் அருண் பாண்டியன் என்பவருக்கு நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, பெரியகுளம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தலைமை எழுத்தராக பணிபுரிந்த ஹேமலதா என்பவர் 2023ஆம் ஆண்டு ரூ.9 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரில் தென்கரை போலீசார் ஹேமலதாவை நேற்று (ஜூன் 3) கைது செய்தனர்