பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீசார் நேற்று (ஜூன் 3) குற்றத்தடுப்பு சம்பந்தமாக அரண்மனைபுதூர் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த விமல் ஆதித்யன் என்பவரை சோதனை செய்ததில், அவர் கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து, அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.