தென்கரை பகுதியை சேர்ந்த செல்லத்துரை, நேற்று (ஜூன் 3) மதியம் அப்பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது இவரை வழிமறித்த சுரேஷ், குடிப்பதற்கு பணம் கேட்டு கத்தியை காட்டி மிரட்டி 500 ரூபாயை பறித்து சென்றுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் தென்கரை போலீசார் சுரேஷ் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.