மன்னார்குடியில் ஆன்லைன் லாட்டரி விற்றவர் கைது
ஆன்லைன் லாட்டாரி விற்ற சுரேஷ் என்ற வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.;
மன்னார்குடியில் ஆன்லைன் லாட்டரி விற்றவர் கைது திருவாருர் மாவட்டம் மன்னார்குடியில் ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் லாட்டரி விற்பனை குறித்து சோதனையில் ஈடுபட்டனர். இதில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட கீழ அந்தோனியார் கோவில் தெருவை சேர்ந்த சுரேஷ் என்பவரை போலீசார் இன்று கைது செய்து மன்னார்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.