ஷேர் ஆட்டோவை ஓட்டி வந்து சாலையோரம் நின்ற லோடு ஆட்டோ, மூன்று இருசக்கர வாகனங்களை இடித்து தள்ளிய போதை இளைஞர்கள்
போதை இளைஞர்கள்;
தேனி அல்லிநகரம் பகுதியில் அதிவேதத்தில் வந்த ஷேர் ஆட்டோ வேன் சாலையோரம் நின்றிருந்த லோடு ஆட்டோ, மூன்று இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது இதனை அடுத்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் விபத்து ஏற்படுத்திய வேனை விரட்டிச் சென்று பிடித்தனர் அதில் மது போதையில் எட்டு இளைஞர்கள் இருந்த நிலையில் ஆறு பேர் அங்கிருந்து தப்பித்து ஓடி விட்டனர் இந்நிலையில் மது போதையில் வேனை ஓட்டி வந்த இரண்டு இளைஞர்களை பிடித்த பொதுமக்கள் அவர்களுக்கு தர்ம அடி கொடுத்தனர் மேலும் ஒருவர் கட்டையால் அந்த இளைஞரை சரமாரியாக தாக்கினார் இதனை அடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த தேனி நகர போலீசார் அரை நிர்வாணத்துடன் திரிந்த போதை இளைஞர் மற்றும் வேனை ஓட்டி வந்த நபரை பொதுமக்களிடம் இருந்து காப்பாற்றி காவல் நிலையம் அழைத்துச் சென்றனர் இந்நிலையில் தங்களது வாகனம் பலத்த சேதம் ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்ற மேலும் நபர்களை பிடிக்க வேண்டும் எனக் கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது இதனைத் தொடர்ந்து போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர் மது போதையில் வேனை இயக்கி விபத்து ஏற்படுத்திய இளைஞர்கள் தங்களது பகுதியை சேர்ந்த இளைஞர்கள் என்றும் முன்விரோதம் காரணமாக வேண்டுமென்றே இதுபோன்று விபத்து ஏற்படுத்தியதாகவும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர் இதுகுறித்து தேனி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய மற்ற போதை இளைஞர்களையும் தேடி வருகின்றனர் இதனால் அல்லிநகரம் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது