பெரியகுளம் அருகே உள்ள தனியார் பில்டிங் குடோனில் இரும்பு பைப்புகள் வைத்திருந்த நிலையில் நேற்று (ஜூன்4) அங்கு சென்ற நாகேந்திரன் என்பவர் 80 ஆயிரம் மதிப்பிலான 40 இரும்பு பைப்புகளை திருடி உள்ளார். அங்கு பணியில் இருந்தவர்கள் நாகேந்திரனை பிடித்து தென்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். திருட்டு குறித்து தென்கரை போலீசார் நாகேந்திரன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.