தேனி அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன் நாற்பது வயதாகியும் இவருக்கு திருமணம் ஆகாத நிலையில், மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார். இதன் காரணமாக நேற்று முன் தினம் வீட்டில் தனியாக இருந்த பாஸ்கரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த அல்லிநகரம் காவல் நிலைய போலீசார் பாஸ்கரன் உடலை கைப்பற்றி நேற்று (ஜூன் 4) வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.