மன்னார்குடியில் வீட்டுமனை பட்டா வழங்கிய அமைச்சர் டி ஆர் பி ராஜா

50க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாவை தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா வழங்கினார்;

Update: 2025-06-05 18:28 GMT
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்த தமிழக தொழில் துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா உள்ளிக்கோட்டை மற்றும் மன்னார்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார் மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் டிஆர்பி ராஜா ஐம்பதற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை நேரடியாக அவர்களின் இருப்பிடத்திற்கு சென்று வழங்கினார்.திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் மற்றும் பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Similar News