அமித்ஷா கலந்து கொள்ளும் விழாவிற்கு பூமி பூஜை
மதுரையில் அமித்ஷா கலந்து கொள்ளும் நிகழ்விடத்தில் இன்று பூமி பூஜை நடைபெற்றது;
மதுரையில் வரும் 8 ம் தேதி நடக்கவிருக்கும் பாஜக மாநில நிர்வாகிகள் சந்திப்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்குபெறவிருக்கும் நிலையில், சந்திப்பு நடக்கவிருக்கும் அவ்விடத்தில் அதற்கான பூமி பூஜையை இன்று (ஜூன் .6) பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இப்பூஜையில், மாநில பொதுச் செயலாளர் இராம சீனிவாசன் அவர்களும், மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள் அவர்களும், மதுரை கிழக்கு மாவட்டத் தலைவர் ராஜசிம்மன் அவர்களும், மதுரை மேற்கு மாவட்டத் தலைவர் சிவலிங்கம் அவர்களும், மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் மாரி சக்கரவர்த்தி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.