கருமாரி அம்மன் தங்க கவச அலங்காரத்தில் காட்சி!
ஸ்ரீதேவி கருமாரி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமையான இன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது ;
வேலூர் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள ஸ்ரீதேவி கருமாரி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமையான இன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவசங்கள் அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கருமாரியம்மனை தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.