ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு!
சக்தி விநாயகர் ஆலயத்தில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடைபெற்றது.;
வேலூர் மாவட்டம் தோட்டப்பாளையம் சக்தி விநாயகர் ஆலயத்தில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் சுவாமிக்கு சனிக்கிழமை தினத்தை முன்னிட்டு இன்று (ஜூன் 7) பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, தொடர்ந்து மகா தீப ஆராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர். பின்னர் கோயிலை சுற்றி வலம் வந்தனர்.