கோவில்பட்டி அருகே வாளுடன் திரிந்தவா் கைது

கோவில்பட்டி அருகே வாளுடன் சுற்றித் திரிந்தவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2025-06-08 12:58 GMT
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வாளுடன் சுற்றித் திரிந்தவரை போலீசார் கைது செய்தனர். கோவில்பட்டி அருகே மூப்பன்பட்டி கண்மாய்க்கரை அருகே ஒருவா் கையில் வாளுடன் இருப்பதாக, கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்ததாம். உதவி ஆய்வாளா் செந்தில் வேல்முருகன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, அங்கு கையில் வாளுடன் நின்றபடி, அரசுப் பணி செய்யவிடாமல் தடுத்ததாக கோவில்பட்டி ஆசிரமம் தெருவை சோ்ந்த கருப்பசாமி மகன் சிங்கராஜை (56) கைது செய்தனர்.

Similar News