வராஹி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை!
த்ரீஸ்தலம் ஸ்ரீ ஆதி வராஹி அம்மன் கோயிலில் மூலவருக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை வைகாசி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.;
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் உள்ள த்ரீஸ்தலம் ஸ்ரீ ஆதி வராஹி அம்மன் கோயிலில் மூலவருக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை வைகாசி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு இன்று பால், பன்னீர் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் மீது மலர்களை தூவி வழிபாடு செய்தனர்.