நாசரேத் நூலகத்தில் இலக்கிய கூட்டம்

நாசரேத் நூலக அரங்கத்தில் வள்ளுவர் வாசகர் வட்டத்தின் மாதாந்திர இலக்கியக் கூட்டம் நடைபெற்றது.;

Update: 2025-06-09 16:34 GMT
நாசரேத் நூலக அரங்கத்தில் வள்ளுவர் வாசகர் வட்டத்தின் மாதாந்திர இலக்கியக் கூட்டம் நடைபெற்றது. நாசரேத் வாசகர் வட்டத்தின் தலைவரும் ஓய்வு பெற்ற வட்டாட்சியருமான அய்யாக்குட்டி  தலைமை வகித்தார். நாசரேத் கிளை நூலகர்  பொன் ராதா முன்னிலை வகித்தார். வாசகர் வட்டத்தின் துணைத்தலைவர் கொம்பையா வரவேற்றுப் பேசினார். இந்த இலக்கிய கூட்டத்தில் வாழ்வின் வெளிச்சம் வாசிப்பு என்ற தலைப்பில் புத்தக வாசிப்பின் மேன்மை குறித்து தூத்துக்குடி குமிழ்முனை புத்தக வண்டி நிறுவனரும் புத்தகப் பதிப்பளருமான குமிழ் முனை சைமன்  சிறப்புரை ஆற்றினார். ஒய்வுபெற்ற பேராசிரியர் முன்னாள் தலைவர் காசிராசன் மற்றும் தேரிக்காட்டுஇலக்கியவாதிகண்ணகுமார விஸ்வரூபன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.இதில் தூத்துக்குடி கவிஞர் மாரிமுத்து, ரவி, மதிமுக தூத்துக்குடி தெற்கு மாவட்ட அவைத்தலைவர் ரஞ்சன், ஓய்வு பெற்ற பேரூராட்சி நிர்வாக அதிகாரியும் எழுத்தாளருமானமணிமொழிச்செல்வன், கவிஞர் சிவா, கவிஞர் மூக்குப்பீரி தேவதாசன், ஓய்வு பெற்ற ஆசிரியர் அருள்ராஜ், ஆசிரியர் செல்வின், செல்லப்பாண்டியன், ஜான் பிரிட்டோ, கந்தசாமி, சிவா, ரத்னசிங் ஜான் பிரிட்டோ, மந்திரம், மனோகரன், அந்தோனிராஜ், மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இலக்கிய ஆர்வலர் கண்ணன் நன்றி கூறினார்.

Similar News