இருசக்கர வாகன இரு வேறு விபத்தில் இருவர் உயிரிழப்பு
இருசக்கர வாகன இரு வேறு விபத்தில் இருவர் உயிரிழப்பு;
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த விஜய் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் திண்டிவனத்தை நோக்கி சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் நிலை தடுமாறி சாலையின் இடதுபுறம் உள்ள தடுப்பு கம்பியில் மோதி விபத்துக்குள்ளானது. தூக்கி வீசப்பட்ட நிலையில் அந்த கம்மி கழுத்து பகுதியில் குத்தி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதேபோன்று சித்தாமூர் அருகே மதுராந்தகம் மரக்காணம் சாலையில் காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது பூங்குணம் பகுதியில் மயில் ஒன்று அவர் மீது மோதி உள்ளது. இதில் நிலை தடுமாறி சாலை ஓரம உள்ள மரத்தில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இவர்களின் உடல்களை மீட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.