சதுரங்க போட்டியில் சாதனை படைத்த அரசு பள்ளி மாணவிகள்

மதுரை மேலூர் அரசு பள்ளி மாணவிகள் சதுரங்க போட்டியில் முதல் இரண்டு இடங்களை பெற்று மாநில அளவில் சாதனை படைத்தனர்;

Update: 2025-06-16 07:09 GMT
தமிழ்நாடு மாநில அளவிலான சதுரங்க போட்டி "ஸ்காலர்ஸ் மேட் செஸ் அகாடமி" சார்பில் விருதுநகர்-சாத்தூர் நெடுஞ்சாலையில் உள்ள "விஸ்டம் வெல்த் சர்வதேச பள்ளி"யில் நேற்று (ஜூன் .15) நடைபெற்றது. இப்போட்டியில் 250க்கும் மேற்பட்டோர் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டனர். 9வயது பிரிவு, 11 வயது பிரிவு, 13 வயது பிரிவு, 16 வயது பிரிவு, ஓபன் ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டன. இப்போட்டியில் 11 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் மதுரை, மேலூர் ஒன்றியம், அ.செட்டியார்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி S.யாகஸ்ரீ ஏழு சுற்றுகளில் விளையாடி முதலிடமும்,9 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் அதே பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி இ.இஸ்பா டுஜானா இரண்டாம் இடமும் பெற்றனர். அதே பள்ளிக்கு அருகில் உள்ள அ.வள்ளாளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவி G.வேதாஸ்ரீ 13 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் நான்காம் இடமும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு அ.செட்டியார்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை மு.மணிமேகலை, அ.வல்லாளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் G.வினோத், இம்மாணவர்களுக்கு சதுரங்க பயிற்சி அளித்தவரும், அ.செட்டியார்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் இடைநிலை ஆசிரியருமான.செந்தில்குமார்,  அ.வல்லாளப்பட்டி சேர்மன் குமரன், கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் பாராட்டினர்.

Similar News