பள்ளிக்கூட வாசலில் மயங்கி விழுந்த மாணவிகள்.

மதுரை திருமங்கலம் கள்ளிக்குடி அரசு பள்ளி வாசலில் மாணவிகள் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை உண்டாக்கியது.;

Update: 2025-06-16 14:34 GMT
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவி அவரது தோழி யான மாணவி இருவரும் இன்று( ஜூன் .16) காலை பள்ளிக்கு வருகை தந்த நிலையில் பள்ளி நுழைவு வாயில் அருகே அவர்கள் இருவரும் திடீரென மயங்கி விழுந்துள்ளனர். சக மாணவர்கள் உடனடியாக பள்ளி ஆசிரியர்களுக்கு தகவல் அளித்து ஆசிரியர்கள் மயங்கி கிடந்த மாணவிகள் இருவரையும் கள்ளிக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட னர்.அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில்சம்ப வம் குறித்து கள்ளிக்குடி காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் மாணவிகள் இருவரும் அருகில் இருந்த கிரா மத்தைச் சேர்ந்த மாணவிகள் என்பதும் இதில் பத்தாம் வகுப்பு மாணவி பள்ளிக்கு செல்ல மறுத்து விடுமுறை எடுப்பதாக வீட்டில் கூறியதால் அவ ரது பெற்றோர் திட்டி பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனால் மனம் உடைந்த மாணவி ஊரிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்த தனது தோழியான மற்ற மாணவியிடம் கூறி தான் விஷம் அருந்தி தற் கொலை செய்யப் போவதாக கூறியுள்ளார். அதற்கு மற்ற மாணவி என் தோழியான நீயே சாக முடிவெடுத்ததால் நானும் உன்னோடு வந்து விடுகிறேன் எனக்கூறி இருவரும் ஊரில் இருந்த பெட்டிக்கடையில் எறும்பு பொடி பாக்கெட்டை எடுத்து தண்ணீரில் கலந்து இருவரும் குடித்து விட்டு பேருந்தில் ஏறி பள்ளிக்கு வந்துள்ளனர் என தெரியவந்துள்ளது .

Similar News