நிவாரண நிதி வழங்கிய மாவட்ட ஆட்சியர்!
நீரில் மூழ்கி மரணமடைந்த சிறுவன் சத்ரியன் என்பவரின் பெற்றோரிடம், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 1,00,000 காசோலையை ஆட்சியர் வழங்கினார்.;
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சத்துவாச்சாரி பகுதியில் நீரில் மூழ்கி மரணமடைந்த சிறுவன் சத்ரியன் என்பவரின் பெற்றோரிடம், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 1,00,000 காசோலையை இன்று (ஜூன் 16) ஆட்சியர் சுப்புலட்சுமி வழங்கினார். இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் காஞ்சனா, வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.