தர்மபுரியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

தர்மபுரியில் சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு;

Update: 2025-06-17 01:19 GMT
தருமபுரி பேருந்து நிலையத்தில் ”சாலை பாதுகாப்பு-உயிர் பாதுகாப்பு” மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கான தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் நேற்று இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் ”சாலை பாதுகாப்பு-உயிர் பாதுகாப்பு” குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சி.க.ஜெயதேவ்ராஜ், தருமபுரி நகர்மன்ற தலைவர் மா.லட்சுமி நாட்டான் மாது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.தடங்கம் சுப்பிரமணி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அ.க.தரணீதர், நகராட்சி ஆணையாளர் திரு.சேகர், தர்மபுரி ஒன்றிய கழக செயலாளர் காவேரி நல்லம்பள்ளி ஒன்றிய கழக செயலாளர் எம் பி பெரியண்ணன் தர்மபுரி நகர் மன்ற உறுப்பினர் மாதேஸ்வரன்.மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Similar News