தலைமை காவலரை தாக்கிய நபர் கைது
தொப்பூர் காவல் நிலைய தலைமை காவலரை தாக்கிய நபர் கைது;
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட பாளையம் புதூர் கிராமத்தில் இரு தரப்பினர் இடையே தகராறு நடைபெறுவதாக தொப்பூர் காவலர்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் விசாரணைக்காக தொப்பூர் காவல் நிலைய தலைமை காவலர் சந்திரசேகர் பாளையம் புதூர் கிராமத்திற்கு நேற்று சென்றுள்ளார் அப்போது கரன்குமார் மற்றும் சின்னசாமி ஆகியோர் தகராறில் ஈடுபட்டிருந்தனர். அங்கு சென்ற காவலர் அமைதியாக இருக்கும்படி இருவரையும் சமரசப்படுத்தினார் அப்போது அங்கிருந்து கலைந்து சென்ற நிலையில் அங்கிருந்து ராஜலிங்கம் என்பவர் அங்கு செல்லாமல் விசாரணைக்கு வந்த தலைமை காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் அப்போது திடீரென தலைமை காவலர் சந்திரசேகரன் தாக்கி கீழே தள்ள முயற்சித்தார். இது குறித்து சந்திரசேகர் காவல் நிலையத்திற்கு புகாரின் பேரில் ராஜ லிங்கத்தை தொப்புர் காவலர்கள் நேற்று மாலை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமைக் காவலர் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது