காரிமங்கலத்தில் மூன்று கோவில்களில் திருட்டு

காரிமங்கலம் அருகே அடுத்தடுத்து மூன்று கோவில்கள் உண்டியலை உடைத்து பணம் திருட்டு;

Update: 2025-06-17 02:04 GMT
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரிமங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட ராமாபுரம் பகுதியில் விநாயகர், அய்யப்பன் மற்றும் மாரியம்மன் கோவில்கள் அமைந்துள்ளன. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பூஜை முடித்து விட்டு கோவில் குருக்கள் கோவிலை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். நேற்று காலை கோவிலுக்கு பக்தர்கள் வந்து பார்த்த போது, உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை பணம் கொள்ளை அடிக்கப்பட்டது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து காரிமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நாளில் 3 கோவில்களில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளை போனது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News