அரசு மருத்துவர் வீட்டில் நகை பணம் திருட்டு
அதியமான் கோட்டை அருகே அரசு மருத்துவர் வீட்டில் நகை மற்றும் பணம் திருட்டு, காவலர்கள் வழக்கு பதிந்து விசாரணை;
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் அதியமான் கோட்டை காமராஜ் நகர் பகுதியில் சீனிவாசன் இவர் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக பணிபுரிந்து வருகின்றார் இவரது மனைவி கவிதாவும் மருத்துவராக உள்ளார் எர்ரப்பட்டி அருகே இவர்கள் மருத்துவமனை நடத்தி வருகின்றனர் இந்த நிலையில் கடந்த நேற்று முன்தினம் இரவு வீட்டைப் பூட்டி விட்டு சீனிவாசன் மற்றும் கவிதா மருத்துவமனைக்கு சென்று விட்டு நேற்று காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்து ஒன்னே கால் பவுன் தங்க நகை, 4 வெள்ளி கொலுசு ,அரைஞான் கொடி, மற்றும் பத்தாயிரம் ரூபாய் பணம் மற்றும் வீட்டில் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா டிஸ்க் ஆகியவை திருடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் உடனே நேற்று இது பற்றி சீனிவாசன் அளித்த புகாரின் பேரில் அதியமான் கோட்டை காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்