வடகாடு போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடு பட்டிருந்தனர். அப்போது அங்குள்ள பெட்டிக்கடையை போலீசார் ஆய்வு செய்ததில், அங்கு மதுபாட்டில்கள் விற் பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வட காடு பாப்பாமனை பகுதியை சேர்ந்த கவியரசன் (வயது 30) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 26 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் கவிய ரசனை போலீசார் ஜாமீனில் விடுவித்தனர்.