பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்த பக்தர்கள்
மதுரை அவனியாபுரத்தில் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து தங்கள் நேர்த்திக்கடனை பக்தர்கள் செலுத்தினார்கள்;
மதுரை மாவட்டம் அவனியாபுரம் பாரதியார் தெரு ஸ்ரீ காட்டுமாரியம்மன் திருக்கோவில் 69 ஆம் ஆண்டு பொங்கல் திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை பொங்கல் படைக்கும் வைபவத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் நாள் நிகழ்வாக நேற்று (ஜூன்.16) அம்மனுக்கு பால்குடம் எடுக்கும் நிகழ்வும் அக்னி சட்டி எடுக்கும் நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது.இதில் அப்பகுதியை சேர்ந்த ஆண்கள் பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனுக்கு பால்குடம் எடுத்தும் தீச்சட்டி எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்கள் இத்திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகளும் தீபாரதனைகளும் நடைபெற்றன. இதில் முக்கிய நிகழ்வான மாபெரும் அன்னதானம் மற்றும் உலக நன்மை மற்றும் மழை பெய்ய வேண்டியும் திருவிளக்கு பூஜை நாளை (ஜூன் .18) புதன்கிழமை நடைபெற உள்ளது.நான்கு நாட்கள் நடைபெறும் திருவிழாவை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.