பிடிபட்டது டூவீலரை திருடும் கும்பல்.
மதுரையில் இருசக்கர வாகனம் திருடும் கும்பல் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.;
மதுரை மாநகரில் குற்ற சம்பவங்கள் நிகழா வண்ணம் அதனை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின் பெயரில் வாகன தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 15.06.2025 அன்று நடத்தப்பட்ட வாகன தணிக்கையின் போது, கோ.புதூர் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்களை விசாரித் போது, அவ்வாகனம் திருட்டு வாகனம் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின மூலம் மேலும் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 13 திருடப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் திறம்பட செயல்பட்ட காவலர்களை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.