நீடாமங்கலம் ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
தளிக்கோட்டை ஊராட்சியில் 3.50 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் பணிகள் ஆய்வு;
நீடாமங்கலம் ஒன்றியம் தளிக்கோட்டை ஊராட்சியில் ரூ 3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கலைஞர் கனவு இல்ல திட்டத்தினையும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தளிக்கோட்டை வடிகால் வாய்க்கால் மேம்பாட்டு பணியினையும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் நேரில் ஆய்வு செய்தார்.ஆய்வின்போது நீடாமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி,பாஸ்கர்,உதவி பொறியாளர்கள் வெங்கடேஷ் குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.