ஒரு மாணவருக்கு ஒரு ஆசிரியர்.

மதுரை திருமங்கலம் அருகே ஒரு மாணவர் படிக்கும் பள்ளிக்கு ஒரு ஆசிரியர் பணியாற்றி வரும் நிகழ்வு நடைபெற்றுள்ளது;

Update: 2025-06-18 12:01 GMT
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி ஒன்றியம் மோதகம் ஊராட்சிக்குட்பட்ட எம்.கரையாம்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் ஓரு மாணவர் மட்டுமே உள்ளார். இந்த ஒரே ஒரு மாணவருக்காக ஓர் ஆசிரியர் மாற்றுப் பள்ளியிலிருந்து இடமாறுதலில் வந்துள்ளார்.கடந்த ஆண்டு இந்த மாணவர் டி.கல்லுப்பட்டியில் உள்ள பள்ளிக்கு படிக்கச் சென்றதால், எம்.கரையாம்பட்டியில் உள்ள பள்ளி மூடப்பட்டது. தற்போது அந்த மாணவர் மீண்டும் கரையாம்பட்டி பள்ளியில் சேர்ந்துள்ளதால் மீண்டும் பள்ளி திறக்கப்பட்டுள்ளது. மாற்றுப் பள்ளிக்குச் சென்ற ஆசிரியரும் மீண்டும் பணியிட மாறுதலில் கரையாம்பட்டிக்கு வந்துள்ளார். இந்த ஒரு மாணவருக்கு மதிய உணவு சிட்டுலொட்டிபட்டி பள்ளியிலிருந்து கொண்டு வரப்படுகிறது. இதேபோல், பேரையூர் அருகே ராமநாதபுரம் ஊராட்சியிலுள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் படிக்கின்றனர். தெய்வநாயகபுரம், லட்சுமிபுரம், புதூர் உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் 5 முதல் 9 மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். இவர்களுக்குரிய மதிய உணவு அருகிலுள்ள பள்ளிகளிலிருந்து வரவழைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News