மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கிய ஆட்சியர்!
நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தில் ஆட்சியர் பார்வையிட்டு, போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.;
வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று (ஜூன் 18) வேலூர் வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின்கீழ் வேலூர் மாநகராட்சி 4 வது மண்டலத்திற்கு உட்பட்ட அரியூர் காந்திரோடு பகுதியில் உள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தில் பார்வையிட்டு, போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இந்த ஆய்வின் போது வட்டாட்சியர் வடிவேல் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.