அமைச்சரிடம் முருக மாநாட்டிற்கான அழைப்பிதழை கொடுத்த பாஜகவினர்

மதுரை திருப்பரங்குன்றம் வந்த அமைச்சரிடம் பாஜகவினர் முருக மாநாட்டிற்கான அழைப்பிதழை வழங்கினார்கள்.;

Update: 2025-06-19 01:02 GMT
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக திருப்பணிகளை பார்வையிட நேற்று (ஜூன்.18) மாலை கோவிலுக்கு வந்த அறநிலையத்துறை அமைச்சர் அமைச்சர் சேகர்பாபுவிடம் பாஜக மதுரை கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள் மற்றும் மாவட்ட தலைவர் சிவலிங்கம் ஆகியோர் மதுரையில் வரும் 22ம்தேதி நடைபெறவுள்ள முருக பக்தர் மாநாட்டிற்கான அழைப்பிதழ் வழங்கினர்கள. அதனை பெற்ற அமைச்சர் மகிழ்ச்சி என்று தெரிவித்து புறப்பட்டு சென்றார்.

Similar News