ஐஸ் பேக்டரியில் கேஸ் கசிவு!
விருதம்பட்டு அருகே ஐஸ் பேக்டரியில் கேஸ் கசிவு ஏற்பட்டுள்ளது.;
வேலூர் மாவட்டம் விருதம்பட்டு அடுத்த தண்டல் கிருஷ்ணாபுரம் பகுதியில் இஷாக் என்பவருக்கு சொந்தமான ஐஸ்கட்டி தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கே பணிபுரியும் ஊழியர் ஒருவர் ஐஸ் கட்டியை எடுத்துக் கொண்டு வரும்போது தவறுதலாக அமோனியம் சிலிண்டரில் இருந்து செல்லும் குழாய் மீது ஐஸ் கட்டியை போட்டுள்ளார். இதனால் பைப் உடைந்து அமோனியம் கேஸ் வெளியேறி காற்றில் பரவியதால் சாலையில் செல்பவர்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது.