திரௌபதியம்மன் கோவிலில் தீமிதி விழா!
லத்தேரி திரௌபதி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது;
வேலூர் மாவட்டம் லத்தேரி திரௌபதி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. அதை தொடர்ந்து தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெற்றது .இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீமித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர். இதற்கான ஏற்பாட்டினை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.