வேலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு நேர்காணல்!
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நேர்காணல் நடைபெற்றது.;
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த காது கேட்காத, வாய் பேச முடியாத, கண் தெரியாத மாற்றுத்திறனாளிகள் விலையில்லா செல்போன் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்பேரில் ஆன்லைனில் 226 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கான நேர்காணல் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. இம்முகாமில் 186 பேர் கலந்து கொண்டனர். அவர்களிடம் அதிகாரிகள் குழுவினர் ஆவணங்களை சரிபார்த்து நேர்காணல் செய்தனர்.