ஒகேனக்கல்லில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

ஒகேனக்கல் காவேரி ஆற்றில் பத்தாயிரம் கன அடியாக நீர் வரத்து அதிகரிப்பு;

Update: 2025-06-20 05:16 GMT
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி ஊராட்சியில் அமைந்துள்ளது ஒகேனக்கல் காவிரி ஆறு. சமீப நாட்களாக ஒகேனக்கல் காவிரியாற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பொழியும் மழையின் அளவை பொறுத்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் சரிவதுமாக உள்ள நிலையில், தற்போது கபினி அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதை அடுத்து, நேற்று 6000 கன அடியாக இருந்த நீர்வரத்து ஜூன் 20 இன்று காலை 7 மணி அளவில், 10000 கனஅடியாக நீர்வரத்து சரிந்துள்ளது. மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீரின் அளவை கணக்கீடு செய்து வருகின்றனர்.

Similar News