பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்திய போலீசார்

மதுரை பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது;

Update: 2025-06-20 05:53 GMT
மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் உத்தரவின்படி, மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் சார்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ -மாணவியர்கள், பொதுமக்கள் இடையே போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மாநகரில் ANTI DRUG CLUB மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டு,செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று (19.06.2025) மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் Anti Drug Club மன்றத்தின் போதைப்பொருள்கள் தடுப்பு தொடர்பான 184 வது விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினர் மற்றும் , மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்

Similar News