ஆற்காடு அருகே தேர்தல் துணை தாசில்தார் ஆய்வு
தேர்தல் துணை தாசில்தார் ஆய்வு;
ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 14 வது வார்டு கவுன்சிலர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இதனால் அங்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அந்த வார்டுக்கு உட்பட்ட 3 வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் துணை தாசில்தார் ரகு மற்றும் வருவாய் துறையினர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.