ராணிப்பேட்டை மாவட்டம் அரப்பாக்கம் பாப்ஸ் நகர் விரிவு பகுதியில் புதிதாக வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் சிமெண்டு சாலை போடும் பணி நடந்தது. பணியின் போது நடுவே மின்கம்பங்கள் இருந்ததால் இந்த பணி அப்படியே நிறுத்தப்பட்டது. மின்கம்பங்களை அகற்றினால் மட்டுமே சாலைப்பணி தொடங்கும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.