டாஸ்மார்க் கடையை எதிர்த்து கிராம மக்கள் போராட்டம்
புதிய டாஸ்மார்க் கடையை எதிர்த்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்;
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே எர்வார்பட்டி ஊராட்சியில் புதிய டாஸ்மார்க் கடையை நேற்று (ஜூன்.21) காலை 12 மணி அளவில் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானதால் அதனை எதிர்த்து பத்துக்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் டாஸ்மார்க் கடை முன்பு திரண்டனர். ஒரு பதட்டம் ஏற்பட்டது. கடையை திறக்க மாட்டோம் என்று எழுதி கொடுத்தால்தான் கலைந்து செல்வோம் என்று போராட்டக்காரர்கள் கூறினார்கள். இதனால் சம்பவ இடத்துக்கு வந்த வட்டாட்சியர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் அதில் திருப்தி அடைந்த மக்கள் தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெற்று கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் உசிலம்பட்டியிலிருந்து விக்கிரமங்கலம் செல்லும் பிரதான சாலை என்பதால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.