நாமக்கல் ஸ்ரீ கோகுல்நாதா மிஷன் இயற்கை மற்றும் யோகா மருத்துவமனை சார்பில் சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்ச்சி!

மாணவ மாணவிகளுக்கு சிறப்பு யோகாசனங்கள், மூச்சுப் பயிற்சி மற்றும் தியான வகுப்புகள் நடைபெற்றது.சிறப்பு யோகா பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் மெடல் வழங்கப்பட்டது.;

Update: 2025-06-22 07:05 GMT
நாமக்கல்- இராமாபுரம் புதூரில் உள்ள ஸ்ரீ கோகுல்நாதா மிஷன் இயற்கை மற்றும் யோகா மருத்துவமனை வளாகத்தில் யோகா தின சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த சிறப்பு நிகழ்ச்சியை நாமக்கல் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தனராசு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.மேலும் நாமக்கல் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் சங்கர பாண்டியன் மற்றும் ஸ்ரீ கோகுல்நாதா மிஷன் இயற்கை மற்றும் யோகா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மாதையன் இயக்குனர் மாயா ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.
இந்த 11-ஆம் ஆண்டு சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஸ்ரீ கோகுல்நாதா மிஷன் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவமனை சார்பாக ஸ்ரீ கோகுல்நாதா மிஷன் கல்வி நிறுவன மாணவ மாணவிகளுக்கு யோகாவின் சிறப்பு வகுப்புகள் குறித்து ஸ்ரீ கோகுல்நாதா மிஷன் இயற்கை மற்றும் யோகா மருத்துவமனை மருத்துவர் விஜயலட்சுமி சிறப்புரையாற்றினார்.
மாணவ மாணவிகளுக்கு சிறப்பு யோகாசனங்கள், மூச்சுப் பயிற்சி மற்றும் தியான வகுப்புகள் போன்றவை நடைபெற்றது. சிறப்பு யோகா பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் மெடல் வழங்கப்பட்டது.

Similar News