நாமக்கல்லில் சர்வதேச யோகா தின விழிப்புணர்வு பேரணி!

நாமக்கல்- மோகனூர் சாலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இருந்து பேரணியை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் சாந்தா அருள் மொழி கொடியசைத்து துவக்கி வைத்தார்.;

Update: 2025-06-22 07:17 GMT
நாமக்கல்லில் 11வது ஆண்டு சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாணவ/மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.நாமக்கல்- மோகனூர் சாலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இருந்து பேரணியை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் சாந்தா அருள் மொழி கொடியசைத்து துவக்கி வைத்தார்.நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவின் உதவி மருத்துவ அலுவலர் டாக்டர் கே.பி.செந்தில்குமார் மாணவர்கள் இடையே யோகா மற்றும் தியான பயிற்சிகளின் நன்மைகள் குறித்தும் பல்வேறு வகையான யோகா பயிற்சிகளை பற்றி செய்முறை மூலம் விளக்கினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ரெட் கிராஸ் செயலாளர் ராஜேஷ் கண்ணன், ஸ்ரீ கோகுல்நாதா மிஷன் இயற்கை மருத்துவமனை இயக்குனர் மாதையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியில் நாமக்கல் மாவட்ட யூத் ரெட் கிராஸ் அமைப்பாளர் வெஸ்லி, அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் சந்திரசேகரன்,ஸ்ரீ கோகுல்நாதா மிஷன் இயற்கை மற்றும் யோகா மருத்துவமனை மருத்துவர்கள்,ஸ்ரீ கோகுல்நாதா மிஷன் கல்லூரி, அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பாவை கல்லூரி மாணவ/ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்த கொண்டனர்.இந்த பேரணியானது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் துவங்கி பேருந்து நிலையம், திருச்சி சாலை வழியாக சென்று மீண்டும் மருத்துவமனை வளாகத்தை வந்து அடைந்தது. பேரணியில் பங்கேற்ற மாணவ/ மாணவியர்கள் யோகா தின முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பேனர்களை கையில் ஏந்தி சென்றனர்.

Similar News