நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளியில் சர்வதேச யோகா தின விழா..!

மாணவர்கள் சூரிய நமஸ்காரம், ஏகபாதாசனம், திரிகோணாசனம், உட்பதாணாசனம், வஜ்ராசனம், யோக முத்ராசனம் போன்ற ஆசனங்களைச் செய்து யோகாவின் முக்கியத்துவத்தை உணர்த்தினர்.;

Update: 2025-06-22 07:49 GMT
நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சிறப்பு யோகா பயிற்சி முகாம் நடைபெற்றது.சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு யோகா பயிற்சிக்கு பள்ளி தலைவர் சரவணன் தலைமை வகித்தார்.பள்ளி முதல்வர் ராஜ சுந்தரவேல், மேல்நிலை வகுப்பு முதல்வர் விக்டர் பிரேம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாணவர்கள் சூரிய நமஸ்காரம், ஏகபாதாசனம், திரிகோணாசனம், உட்பதாணாசனம், வஜ்ராசனம், யோக முத்ராசனம் போன்ற ஆசனங்களைச் செய்து யோகாவின் முக்கியத்துவத்தை உணர்த்தினர்.முன்னதாக அனைத்து மாணவ மாணவிகளும் யோகா உறுதிமொழி ஏற்றனர். திரளான மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Similar News