போதை பொருள் ஒழிப்பு மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு கூட்டம்
போதை பொருள் ஒழிப்பு மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு கூட்டம்;
திருச்செங்கோடு நகர காவல் நிலையம் சார்பில் பள்ளி பள்ளி மாணவ மாணவியர்களுக்கு போதைப் பொருள் மற்றும் போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சிவசிதம்பரம் தலைமை வகித்தார்.காவல் நிலைய உதவி ஆய்வாளர்சேகரன், சிறப்பு உதவி ஆய்வாளர் புஷ்பா, போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணிஆகியோர் போதைப் பொருள்பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் என்னஎன்பது குறித்தும் எங்கேயாவது போதைப்பொருள் விற்பது தெரிய வந்தால் காவலர்களுக்கு தகவல் கொடுக்க வேண்டும் எனவும்,போக்குவரத்து விதிமுறைகளை மதித்து நடப்பதன் மூலம் தான் விபத்துகளை தவிர்க்க முடியும் ஏழையா சமூகத்தினர் தான் அத்தகைய விழிப்புணர்வை வீட்டில் உள்ளவர்களுக்கும் சமூகத்தில் உள்ளவர்களுக்கும் ஏற்படுத்த முடியும் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசினார்கள். நிகழ்ச்சியில் சுமார் 300 க்கும்மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.